Friday, 6 February 2009

செல்போன்

விஞ்ஞான வீரிய புத்தகத்தின்
விநோதமான பக்கங்களில் ஒன்று நீ!
தரணியின் சிறந்த மொழிகளில் ஒன்றாம்
தமிழில் உனக்கு பெயர் முரண்பாடா என்ன??
என்னவென்று சொல்வது உன்னை கைபேசி !
கையடக்கபேசி!! கைதொலைபேசி!!!
கண்ணே!
நமக்கேன் முரண்பாடு கைபேசி என்றே இருக்கட்டும்...


கண்ணே என்று நான் சொல்வதால் கோபம் வேண்டாம் என் மீது!!
குழந்தையை கூட கண்ணே என்று அழைப்பதுண்டு ஆம்!
குழந்தையும் நீயும் ஒன்று தான்.!!!
தொட்டவுடன் அழுகையை நிறுத்துவதால் தயக்கமின்றி சொல்வேன் நீயும் ஒரு குழந்தை என்று... உண்மைதான் இது!
உன்னையும் சேய் போல்தான் பாதுகாக்கின்றோம்..
உறக்கம் நீ கொள்ள பஞ்சு விரிப்பு!
உறக்கத்தில் நீ அழுதால் அரவணைப்பு!!
உவமை இது போதுமா? இன்னும் வேண்டுமா??


மட்டுமல்ல அன்பே!
பெண்மையும் நீயும் ஒன்றுதான்...ஆம்!
உன்னைப்பற்றிய எதிர்பார்ப்புகளில்ஆண்கள் என்றுமே திருப்தியடைவதில்லை!
அற்ப மனது கண்டபடி அலைபாயும்....
எழுத்து பரிமாற்றத்தை துண்டாடிய எழிட்சி மிகு சூழ்ச்சி மந்திரம் நீ!!!
ஆம்! உண்மை தான்..அஞ்சல் தொடர்பு எனும் பழமொழி தொலைந்துமின்னஞ்சல் எனும் அறிவியலின் பிடியில் இப்போது...
உன் மீது தவறில்லை!
விஞ்ஞானம் என்பதே பழயதை ஒழிக்கும் புது பரிணாமம் தானே மானிடத்தில் நிகழும் சுக துக்கங்களை வினாடியில் கடத்தும் சாகசப் பிறவி நீ....
எனக்கு மட்டுமல்ல! மனிதருக்கெல்லாம் நீ வரப் பிரசாதம் தான்!!குழந்தைகளின் பொம்மை நீ! குமரிகளின் அழகு சாதனப்பெட்டி நீ!!
காதலர்களின் முதல் முத்தம் நீ!!! குடும்பத்தினரின் கைக்குழந்தை நீ!!!!முதியோர்களின் ஊன்றுகோல் நீ!!!!!
வார்த்தைகள் தெரியவில்லை வர்ணித்து உன் புகழ் பாட...
மொத்தத்தில் முற்று புள்ளி உன்னில் இருந்தாலும் முடிவு பெறா சகாப்தம் நீ...
தொடரட்டும் உன் சேவை!! தொலைபேசியின் சினுங்கலாய்,

எழுதியவன் அன்பன் புஷ்பராஜ்
அர்பணிக்கிறேன் எனது பலகையில்.....

1 comment: